கேரள மாநில உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அதிக ஆர்வம் காட்டும் பெண்கள்…!

கேரள மாநில உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கல்லூரி மாணவிகள் உட்பட 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் டிசம்பர் 8-ம் தேதி முதல் 14ம் தேதி வரை உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. கேரள மாநில பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளில் 50% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட 1,068,28 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பல உள்ளாட்சி அமைப்புகளில் 50% இட ஒதுக்கீடு தவிர பொது இடங்களிலும் பெண்கள் போட்டியிட விண்ணப்பம் செய்துள்ளனர். கோழிக்கோடு அருகில் உள்ள குணுமால் கிராம பஞ்சாயத்து வார்டுகளுக்கான தேர்தலில் போட்டியிட 10 பெண்களுக்கு இடது சாரி கட்சிகள் வாய்ப்பளித்துள்ளன. அதில் சரண்யா, ரீத்தா என்ற இரண்டு பேர் தற்போதுதான் கல்லூரி முடித்த மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.