கொரோனாவல், உடல் பாகங்கள் பாதிக்காமல் இருக்க மருந்து கண்டுபிடிப்பு!! அசத்திய பெண் மருத்துவர்..

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து உலக நாடுகள் பல, தடுப்பு மருந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தெலுங்கானாவில் பிறந்து அமெரிக்காவில் வசித்துக் கொண்டிருக்கும் ஓர் இந்தியப் பெண் மருத்துவர், கொரோனா பாதித்த நோயாளிகளின் உடல் பாகங்களை காக்க மருந்து கண்டுபிடித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

திருமலா கண்ணகாந்தி என்ற பெண் மருத்துவர் தெலுங்கானா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். வேதியியல், விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட துறைகளில் பட்டம் பெற்ற இவர் அமெரிக்காவில் டென்னிசி மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜூட் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றுகிறார். கடந்த 2007ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்துவரும் இவர், தற்போது கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு உதவ ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.

கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு உடல் வீக்கம், நுரையீரல் மற்றும் இதர உடல் பாகங்கள் பாதிப்பு ஆகியவற்றை தடுக்க இவர் தற்போது மருந்து கண்டுபிடித்து உள்ளார். இவரது இந்த ஆராய்ச்சி முடிவுகள் ‘செல்’ என்ற மருத்துவ இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கியவர்களில் பெரும்பாலான வயோதிகர்களின் உடல் பாகங்களை கொரோனா வைரஸ் தாக்குகிறது.

இதன்காரணமாக உடல் பாகங்கள் பழுதடைகின்றன. இதனைத்தடுக்க இவர் தற்போது மருந்து கண்டுபிடித்துள்ளது பாராட்டு பெற்றுள்ளது. உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சி நடைபெறும் வேளையில் உடல் பாகங்களை காக்க மருந்து கண்டுபிடித்த இந்திய வம்சாவளி மருத்துவருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x