டென்னிஸ் சங்கம் கேட்டுக்கொண்டதால் மீண்டும் களம் இறங்கிய நவோமி ஒசாகா!!! இறுதிபோட்டிக்கு முன்னேற்றம்…

நியூயார்க்,
அமெரிக்காவில் கருப்பின இளைஞரை போலீசார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சமப்வத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டததில் இருந்து விலகுவதாக ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, அதிரடியாக அறிவித்தார்.

ஆனால் இன பாகுபாட்டுக்கு எதிராக நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஒரு நாள் ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து டென்னிஸ் சங்கம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தனது முடிவை மாற்றிக்கொண்டு நேற்று மீண்டும் களம் இறங்கிய ஒசாகா 6-2, 7-6 (5) என்ற செட் கணக்கில் எலிசி மெர்டென்சை (பெல்ஜியம்) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்