தமிழகத்தில் அழிவின் விளிம்பில் 3,083 நீர்நிலைகள்.. அதிமுக அரசுக்கு கெடு விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம்!!

தமிழகத்தில் அழிவின் விளிம்பில் உள்ள 3,083 நீர்நிலைகளை மீட்டெடுக்க தமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று 2015 ஆம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஐந்து ஆண்டு காலமாக நடந்து வந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பில், “அனைத்து மாநிலங்களிலும் நீர்நிலைகளை பாதுகாப்பதற்கு தலைமைச் செயலாளர்கள் மேற்பார்வையில் உரிய அதிகாரிகளை நியமித்து கண்காணிக்க வேண்டும்.

அனைத்து மாநிலங்களும் நீர்நிலைகள் குறித்து ஜனவரி 31ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி அவற்றைப் பாதுகாக்க உரிய தீர்வு முறைகளை வகுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 658 நீர்நிலைகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், 3,083 நீர்நிலைகள் அழிவின் விளிப்பில் உள்ளது. அவற்றை மீட்டெடுக்க வேண்டும்” என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x