“முதல்வருக்கு எதிராகச் பொய் சாட்சி சொல்ல என்னை நிர்பந்திக்கிறார்கள்” – ஸ்வப்னா சுரேஷ்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சுங்கத்துறை, என்.ஐ.ஏ உள்ளிட்ட மத்திய அரசு ஏஜென்சிகள் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள சி.பி.எம் அரசுக்கு ஸ்வப்னா சுரேஷ் வழக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. கேரள எதிர்கட்சிகளான காங்கிரஸும், பா.ஜ.க-வும் பினராயி விஜயன் அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்தநிலையில் திருவனந்தபுரம் அட்டகுளங்கர சிறையில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ் பேசும் ஆடியோ ஒன்று இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோவில் ஸ்வப்னா, “நான் சிவசங்கரனுடன் யு.ஏ.இ சென்று சி.எம்-க்காக பணம் சமந்தமாக பேரம் பேசியதாகக் கூறும்படியும், அப்படி முதல்வருக்கு எதிராகச் சாட்சி சொன்னால், என்னை அப்ரூவராக மாற்றுவதாகவும் கூறி விசாரணை அதிகாரிகள் நிர்பந்திக்கிறார்கள்.
நான் அப்படி சொல்லமாட்டேன் எனக் கூறினேன், இருந்தாலும் அவர்கள் ஜெயிலுக்கு வர வாய்ப்பு உள்ளது. நான் அளித்த வாக்குமூலத்தை என்னைப் படிக்க விடாமல் கையெழுத்து வாங்குகிறார்கள்” என அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.