“மதத்தை அரசியலுக்கு ஆயுதமாக பயன்படுத்துவதை பாஜக கட்சி நிறுத்த வேண்டும்” என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாடல்!!

“மதத்தை அரசியலுக்கு ஆயுதமாக பயன்படுத்துவதை பாஜக கட்சி நிறுத்த வேண்டும்” என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. நுஸ்ரத் ஜகான் கடுமையாக சாடியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. நுஸ்ரத் ஜகான் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “காதல் என்பது ஒரு தனிநபரின் விருப்பம். யாரை காதலிக்க வேண்டும், யாரை திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்ல எவருக்கும் உரிமை கிடையாது. காதலும், ஜிகாத்தும் ஒன்றாக இருக்கக்கூடாது என்று கூறி வருகிறது.
தனி மனித விருப்பமான காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜக கட்சி மதத்தை அரசியலுக்கு ஆயுதமாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். மேலும் எதை சாப்பிட வேண்டும். எதை அணிய வேண்டும் என்று மேற்கு வங்க மக்களுக்கு பாஜக சொல்லி தர தேவையில்லை.
பாஜக கட்சியினருக்கு நான் சொல்லிகொள்வது என்னவென்றால், முதலில் மேற்குவங்கத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்களது மொழியையும், கலாச்சாரத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.” என்று காட்டமாக குறிப்பிட்டார்.
திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோஷ் கூறுகையில், “நாங்கள் தனி மனித தாக்குதலை ஏற்பதில்லை. மேற்கு வங்கத்தின் வளர்ச்சியை பற்றி தான் பேச விரும்புகிறோம். ஆனால் பாஜக கட்சியின் தனி மனித தாக்குதலில் ஈடுபடுவதோடு, மக்களிடம் எதிர்மறையான கருத்துக்களையும், வன்முறையையும் தூண்டி விடுகின்றனர். இதன்மூலம் அவர்களே அவர்களுக்கு குழியைத் தோண்டி வருகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.