உளவு பார்க்க வந்த அமெரிக்க கப்பல்!! விரட்டியடித்த ரஷ்ய பாதுகாப்பு படையினர்..
![](https://thambattam.com/storage/2020/11/gallerye_180919668_2658714.jpg)
ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் தற்போது மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது. அவ்வப்போது ரஷ்யாவை அமெரிக்கா மறைமுகமாக கண்காணிப்பதாகக் கூறப்பட்டு வந்தது. தற்போது இது நிரூபணமாகியுள்ளது.
ஜப்பான் கடற்கரையில் அமெரிக்க கப்பல் ஒன்று ரஷ்யாவை உளவு பார்த்ததாகவும் அதனை ரஷ்ய பாதுகாப்பு கப்பல் படையினர் விரட்டி அடித்ததாகவும் ரஷ்ய வெளியுறவு துறை தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.
அட்மிரல் வினோகிரடோவ் என்ற ரஷ்ய கப்பல் தங்கள் நாட்டு கடல் எல்லையில் உளவு பார்க்க வந்த அமெரிக்க கப்பலை விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. ரஷ்ய கப்பலின் தாக்குதலை அடுத்து சர்வதேச கடல் பகுதிக்கு அமெரிக்க கப்பல் சென்றதாக கூறப்படுகிறது. ரஷ்ய கடல் எல்லைக்குள் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு அத்துமீறி இந்த அமெரிக்க கப்பல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்கா உடனான உறவு குறித்து பேசுகையில் ஏற்கனவே ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஆன உறவு முடிந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.