வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக நண்பகலுக்குள் வலுப்பெறும்!!

நிவர் புயல் காரணமாக சென்னை புரசைவாக்கத்தில் சுமார் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக நண்பகலுக்குள் வலுப்பெறும் என்றும் 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றிரவு கரையை கடக்கும் என்றும் புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயலால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, திருவாரூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் அதிகபட்சமாக புரசைவாக்கத்தில் 15 செ.மீ.மழை பதிவாகியுள்ளது. பல்வேறு பகுதியில் பதிவாகியுள்ள மழை விவரம்:-
சோழிங்கநல்லூர் – 14.5 செ.மீ.
கிண்டி- 14.3 செ.மீ.
நுங்கம்பாக்கம்- 14 செ.மீ.
அண்ணா பல்கலைக்கழகம்- – 14 செ.மீ.
மயிலாப்பூர்- 14 செ.மீ.
எழும்பூர்- 13.7 செ.மீ.
மாம்பலம்- 13.6 செ.மீ.
ஆலந்தூரில்-11.9 செ.மீ.