‘ஜியோ எங்கள காப்பி அடிச்சிட்டாங்க…’ ‘ஜூம்’ செயலி அதிர்ச்சி

இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட சில சீன செயலிகள் தடையால், அந்த நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதனால், மற்ற சீன செயலிகள் கலக்கம் அடைந்துள்ளன. இப்போது பல நிறுவனங்கள், தாங்கள் சீன நிறுவனமல்ல என, அவசர அவசரமாக மறுத்து வருகின்றன. ஆன்லைன் வகுப்புகள், அலுவலக மீட்டிங்குகள் போன்றவற்றுக்காக முக்கியமாக பயன்படுத்தப்படும் ‘ஜூம்’ செயலியும் ‘நாங்கள் சீன நிறுவனமல்ல என்று மறுத்துள்ளது.
இது குறித்து, ‘ஜூம் வீடியோ கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனத்தின் இந்தியத் தலைவர் சமீர் கூறியதாவது: ‘ ‘ஜூம்’ நிறுவனம், சீனாவை சேர்ந்தது கிடையாது. இது ஓர் அமெரிக்க நிறுவனம். எங்களது தரவுகள், இந்தியாவுக்கு வெளியே சேமிக்கப்படவில்லை. பாதுகாப்பாக வைத்துள்ளோம். இது குறித்து அரசுக்கு விளக்கி இருக்கிறோம். ‘ஜியோ மீட்’ (Jio Meet) செயலி எங்களை அச்சு அசலாக காப்பி அடித்தது இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அதன் மீது வழக்கு தொடர்வது குறித்து, நிறுவனத்தின் சட்டப் பிரிவுதான் முடிவு செய்யும்.’ இவ்வாறு அவர் கூறினார்.