கொரோனா ஊரடங்கை இந்தாண்டு டிசம்பர் வரை நீட்டித்த பிரான்ஸ் நாடு!!

பிரான்சில் போடப்பட்ட கொரோனா ஊரடங்கு டிசம்பர் வரை நீடிக்கும் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், ஒவ்வொரு நாட்டு அரசும் தங்களது நாட்டில், ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பிரான்சில், வரும் டிசம்பர் மாதம் வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கும் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில், “பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், தேச பாதுகாப்பு அடுத்த 15 நாட்களுக்கு மாற்றப்படாமல் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று அதிபருடன் சேர்ந்து முடிவெடுத்துள்ளோம். இதன்படி, ஊரடங்கு விதிகள் தொடர்ந்து நீடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
பிரான்சில் வெள்ளிக்கிழமை வரை 19.15 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில் 42 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.