“தேர்வாளர்கள் குழு வாக்கெடுப்பில் ஜோ பைடன் வெற்றி பெற்றால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்” டிரம்ப் பேட்டி!!
![](https://thambattam.com/storage/2020/11/joe-biden-donald-trump-split-file-780x470.jpg)
அமெரிக்க அதிபர் டிரம்ப், தேர்வாளர்கள் குழு வாக்கெடுப்பில் ஜோ பைடன் வெற்றி பெற்றால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதாகக் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 270 மக்கள் பிரதிநிதி வாக்குகளைப் பெற்றாலே போதும் என்ற நிலையில், ஜோ பைடனுக்கு 306 வாக்குகள் கிடைத்துள்ளன. டொனால்ட் டிரம்ப்புக்கு 232 மக்கள் பிரதிநிதி வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.
இந்நிலையில், தேர்வாளர் குழு எதிராக வாக்களித்தால், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவீர்களா என்று கேட்டதற்கு நிச்சயமாக வெளியேறுவேன் என்று கூறிய டிரம்ப், தேர்வாளர் குழுவினர் பைடனை தேர்ந்தெடுத்தது தவறு என்றும் “இது ஒரு பெரிய மோசடி” என்று கூறினார்.
புதிய அதிபர் யார் என்பதை முடிவு செய்வதற்காக, டிசம்பர் 14 ஆம் தேதி எலக்டரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர்கள் குழு கூடி வாக்களிக்க உள்ளனர்.