“சத்தியத்திற்காகப் போராடும் விவசாயிகளை உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது” காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்வீட்!!
“சத்தியத்துக்காக போராடும் விவசாயிகளை உலகில் எந்த அரசும் தடுக்க முடியாது” என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இணைந்து தலைநகா் தில்லி நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளன.
வியாழக்கிழமை பேரணியைத் தொடங்கிய விவசாயிகளை ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் நேற்று காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும், கண்ணீர் புகைக்குண்டுகளையும், தண்ணீரைப் பாய்ச்சியும் விவசாயிகளின் போராட்டத்தை கலைக்க முயற்சித்தனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தடைகளை மீறி விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியைத் தொடர்கின்றனர். பல்வேறு தடைகளுக்குப் பின்னர் தில்லியில் புராரி மைதானத்தில் அமைதியான முறையில் அவர்கள் போராட்டம் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
PM को याद रखना चाहिए था जब-जब अहंकार सच्चाई से टकराता है, पराजित होता है।
सच्चाई की लड़ाई लड़ रहे किसानों को दुनिया की कोई सरकार नहीं रोक सकती।
मोदी सरकार को किसानों की माँगें माननी ही होंगी और काले क़ानून वापस लेने होंगे।
ये तो बस शुरुआत है!#IamWithFarmers
— Rahul Gandhi (@RahulGandhi) November 27, 2020
இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “உண்மையுடன் போரிடும்போது ஆணவம் அழிக்கப்பட்டுவிடும் என்பதை பிரதமர் மோடி நினைவில் கொள்ள வேண்டும். சத்தியத்திற்க்காகப் போராடும் விவசாயிகளை உலகில் எந்த அரசும் தடுக்க முடியாது. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மோடி அரசு உடன்பட வேண்டும். கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். இது ஆரம்பம் மட்டுமே!” என ‘#IamWithFarmers’ என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்.