“நாகர்கோவில் – மும்பை இடையே டிசம்பர் 7- ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும்” தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
![](https://thambattam.com/storage/2020/11/Nagercoil-_Mumbai-Train-780x470.jpg)
“நாகர்கோவில் – மும்பை இடையே மதுரை வழியாக டிசம்பர் 7- ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும்” என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாகர்கோவில்- மும்பை நகரங்களுக்கு இடையே மதுரை வழியாக வாரம் நான்கு முறை சிறப்பு ரயில்கள் டிசம்பர் முதல் வாரத்தில் இயக்கப்படுகிறது. நாகர்கோவில்- மும்பை சிறப்பு ரயில் (06340) டிசம்பர் 7 ஆம் தேதி முதல் திங்கள், செவ்வாய், புதன், வெள்ளிக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 7.15 மணிக்கு மும்பை சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் மும்பை- நாகர்கோவில் சிறப்பு ரயில் (06339) டிசம்பர் 8 -ஆம் தேதி முதல், செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு வியாழன், வெள்ளி, சனி மற்றும் திங்கள்கிழமைகளில் காலை 10.20 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்.
இந்த ரயில்கள் வள்ளியூர், நான்குநேரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், திருப்பத்தூர், காட்பாடி, சித்தூர், மதனப்பள்ளி சாலை, கதிரி, தர்மாவரம், அனந்தப்பூர், குண்டக்கல், அடோனி, மந்த்ராலயம் , ரெய்ச்சூர், யாட்கிர், கலபுரகி, சோலாப்பூர், குர்ட்வாடி, டான்ட், புனே, கல்யாண், தானே, தாதர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.