நிவர் புயலில் ஆளில்லாத வீட்டில் கை நீட்டிய திருடர்கள்… துரத்தி பிடித்த காவல்துறை!!
![](https://thambattam.com/storage/2020/11/4c1f66e2027c901985dbb8adc7355815ede7078bf3b4d25ceec8d3dce092ee62.jpg)
நிவர் புயலின் போது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நேரத்தில், பூட்டியிருந்த வீட்டில் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை அசோக் நகர் பகுதியே சேர்ந்த பார்த்தசாரதி (65) என்பவர் குடும்பத்துடன் சாஸ்திரி நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அந்த நேரத்தில் அவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 38 சவரன் நகை, 2 லட்ச ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அப்பகுதியை சேர்ந்த குற்றவாளிகள் சிலரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஏனென்றால் அந்தப் பகுதியில் சிசிடிவி கேமரா கிடையாது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த ராஜேஷ் (18), பிரகாஷ்(20), விக்கி ஆகிய மூவரை போலீஸார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து போலீஸார் நகையை கைப்பற்றினர்.
ஆனால் 2 லட்ச ரூபாய் கொள்ளை அடித்துவிட்டு வெறும் 22 ஆயிரம் ரூபாய் மட்டுமே வைத்திருந்தனர். இதனையடுத்து மீதிப் பணத்தை மீட்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். புகார் அளித்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த போலீஸார் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டியுள்ளார்.