விண்வெளியில் மோத உள்ள இந்திய – ரஷ்ய செயற்கைகோள்கள்.. தீவிர ஆலோசனையில் இறங்கிய இரு நாட்டு விஞ்ஞானிகள்!!

விண்வெளியில் குறைந்த இடைவௌியில் இந்திய – ரஷ்ய செயற்கைகோள்கள் மோதிக் கொள்ளும் அபாயத்தில் உள்ளதால், இருநாட்டு விஞ்ஞானிகளும் தீவிர ஆலோசனை ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து  கடந்த 2018 ஆம் ஆண்டு, ஜனவரி 12ல் ஏவப்பட்ட இந்தியாவின் ‘ரிமோட் சென்சிங்’ செயற்கைக்கோள் கார்டோசாட் -2 எஃப், விண்வெளியில் ரஷ்யாவின் செயற்கைக்கோளுக்கு மிக அருகில் வந்துள்ளது. இரண்டு செயற்கைக்கோள்களுக்கும் இடையிலான மோதல்களைத் தவிர்ப்பதற்காக, இரண்டு நாடுகளின் விண்வெளி நிறுவனங்களும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

இரண்டு செயற்கைக்கோள்களுக்கும் இடையிலான தூரம் 224 மீட்டர் மட்டுமே ரஷ்யா கூறியுள்ளது. ஆனால், இந்தியாவின் இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், இரு செயற்கை கோளுக்கும் இடையே உள்ள தூரத்தை 420 மீட்டர் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ராஸ்கோமோஸ், தனது கூட்டு நிறுவனமான ஸ்னிமாஷின் அளித்த தகவல் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையில், “ஸ்னிமாஷின் கணக்கீடுகளின்படி, ரஷ்யாவிற்கும்  வெளிநாட்டு செயற்கைக்கோளுக்கும் (இந்தியா) இடையிலான குறைந்தபட்ச தூரம் 224 மீட்டர் உள்ளது. 700 கிலோ எடைகொண்ட இந்தியாவின் கார்டோசாட் 2 எஃப் செயற்கைக்கோள், ரஷ்யாவின் கனோபஸ்-வி விண்கலத்திற்கு அருகே ஆபத்தான முறையில் நெருங்கி உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறுகையில், “நாங்கள் 4 நாட்களாக இந்த செயற்கைக்கோளை கண்காணித்து வருகிறோம். ரஷ்ய செயற்கைக்கோளிலிருந்து சுமார் 420 மீட்டர் தொலைவில் நமது செயற்கைகோள் உள்ளது. அது, சுமார் 150 மீட்டர் தூரத்தை நெருங்கும் போது நடவடிக்கை எடுக்கப்படும்.

செயற்கைக்கோள்கள் பூமியின் ஒரே சுற்றுப்பாதையில் இருக்கும்போது, ​​இவை சாதாரணமான நிகழ்வு அல்ல. இரு நாட்டின் விண்வெளி நிறுவனமும் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றன. சமீபத்தில் ஸ்பெயினின் செயற்கைக்கோளுடன் இதேபோன்ற நிலை ஏற்பட்டது. பின்னர் மோதல் தவிர்க்கப்பட்டது. இதனை பொதுவெளியில் தெரியப்படுத்த முடியாது” என்றார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x