நைஜீரியாவில் கொடூரம்: 43 விவசாயிகளை கடத்தி கொலை செய்த பயங்கரவாதிகள்!!
வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் நூறு பேரை கடத்தி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் அரசுத் தரப்பு, போகோ ஹாரம், ஐஎஸ் பயங்கரவாதிகள் அடிக்கடி மோதிக் கொண்டு இதுபோன்று அப்பாவி மக்கள் உயிரை பறிப்பது தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது.
மக்கள் அரசுக்கு தங்களைப்பற்றி தகவல்கள் தருகிறார்கள் என்ற ஆத்திரத்தில் போகோ ஹாரம் பயங்கரவாதிகள் இதுபோன்ற மனிதத்தன்மையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில் நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த 43 விவசாயிகளை பைக்குகளில் ஆயுதம் ஏந்தி வந்த கும்பல் கடத்திச் சென்று கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது. மேலும் அந்த கும்பல் விவசாயிகளின் மனைவிகளையும் கடத்திச் சென்றுள்ளது.
இந்த கொடூர செயலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் போகோ ஹாரம் அமைப்பு தான் செய்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த கொடூர செயலுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.