ரவுடி விகாஸ் துபேவை என்கவுன்டர் செய்தது சேலம் தமிழர்

உத்தரபிரதேசத்தை கலங்கடித்த ரவுடி விகாஸ் துபேவை என்கவுன்டரில் கொல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சேலத்தை சேர்ந்த எஸ்பி தினேஷ்குமார் (வயது 34). சேலம் மாவட்டம் கொளத்தூரில் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர். கோவை வேளாண் கல்லூரியில் பிஎஸ்சி வேளாண்மை படித்து முடித்த இவர், சிவில் சர்வீஸ் தேர்வெழுதி தேசிய அளவில் 345வது ரேங்க் பெற்றார். உத்தரபிரதேச மாநிலத்தில் 2009ம் ஆண்டில் ஏஎஸ்பி பொறுப்பில் நியமிக்கப்பட்டார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் கான்பூர் எஸ்பியாக பொறுப்பேற்றார்.
கான்பூர் எஸ்பியாக பொறுப்பேற்ற ஒரே மாதத்திலேயே காவல்துறையை கலங்கடித்த ரவுடியை, இவரது தலைமையிலான போலீசார் அதிரடியாக சுட்டுக்கொன்றுள்ளனர். இவர்தான், ரவுடி விகாஸ் துபேவின் கட்டுப்பாட்டில் இருந்த 68 போலீசாரை கூண்டோடு இடமாற்றம் செய்தார்.