வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘புரெவி’ புயல்… தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு எச்சரிக்கை!!
வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் காரணமாக தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அதனால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தென் தமிழகம், கேரளா வழியே அரபிக் கடல் நோக்கிச் செல்லும் என கூறப்படுகிறது. புயலுக்கு ‘புரெவி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. எனவே ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருப்பவர்களை கரைக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவித்தார்.