தங்கத்தில் முகக்கவசம்: பந்தா காட்டும் பணக்காரர்!

சீனாவில் முதன்முதலில் பரவ ஆரம்பித்த கொரோனா இன்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது.

இந்நிலையில் ஒருவர் தங்கத்தில் முகக்கவசம் அணிந்துள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்தவர் சங்கர் குராட். புனேவின் பிம்ப்ரி- சின்ச்வாட் பகுதியை சேர்ந்த பணக்காரர் ஷங்கர். இவர் தனது முகத்துக்கு ஏற்றவகையில் ஒரு தங்க முகக்கவசம் தயாரித்து அணிந்துள்ளார். இந்த தங்க முகக்கவசத்தின் மதிப்பு சுமார் 2.89 லட்ச ரூபாய் ஆகும்.

இதன் காரணத்தை சங்கர் கூறும்பொழுது, “நான் சமூக வலைதளம் ஒன்றில் வெள்ளியினால் செய்யப்பட்ட முககவசத்தை ஒருவர் அணிந்திருப்பதை பார்த்தேன். இதையடுத்து தங்கத்தில் முகக்கவசம் செய்து கொள்ள விரும்பினேன். இதில் சிறு சிறு ஓட்டைகள் இருப்பதால் அணிந்து கொள்ளும்போது மூச்சு விடுவதில் எந்த சிரமும் தெரியவில்லை. இந்த முகக்கவசம் கொரோனா தொற்றிலிருந்து எந்த அளவுக்கு பாதுகாக்கும் என்று உறுதியாக தெரியவில்லை” இவ்வாறு ஷங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது உடல் முழுக்க தங்க ஆபரணங்களை அணிந்துகொண்டு வலம் வருகிறார் சங்கர். ‘கொரேனாவால் ஏற்பட்டிருக்கும் பஞ்சத்தில், உங்களை யாராவது அப்படியே கொத்திகிட்டு போய்விட பார்க்கிறார்கள். ஜாக்கிரதை சங்கர்’என்று கிண்டலடிக்கிறார்கள் பொதுமக்கள்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x