‘புரெவி’ புயல் காரணமாக, தமிழகம் மற்றும் கேரளாவிற்கு மஞ்சள் அலர்ட்..

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘புரெவி’ புயல் காரணமாக, தமிழகம் மற்றும் கேரளாவின் தென்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புரெவி என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், நேற்றிரவு எட்டரை மணி நிலவரப்படி, இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 330 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இன்று மாலை அல்லது இரவில் திரிகோணமலை அடையும் புரெவி, மறுநாள் மன்னார் வளைகுடா வரும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அதே வலுவுடன் கன்னியாகுமரி – பாம்பன் இடையே நான்காம் தேதி கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும்போது 95 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என்பதால், தெற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புரெவி புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா மாவட்ங்களிலும் அதிகனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திலும் கேரளாவிலும் தென் மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே புயலை எதிர்கொள்ள தமிழகத்திற்கு 18 தேசியப் பேரிடர் மீட்புக்குழுக்களும், கேரளாவில் 8 குழுக்களுக்கும் அனுப்பப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x