தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 14-ந்தேதி செவ்வாயன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் 1.3 லட்சத்தை கடந்துள்ளது. சென்னையைத் தவிர பிற மாவட்டங்களிலும் கணிசமான எண்ணிக்கையில் தினமும் தொற்று பாதிப்பு பதிவாகிறது. இந்நிலையில் தலைமை செயலகத்தில் வரும் செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் , தமிழகத்தில் நிறுத்தப்பட்டுள்ள பொது போக்குவரத்தை எப்போது தொடங்குவது என்பது குறித்தும் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் எனத்தெரிகிறது. அமைச்சர்களில் செல்லூர் ராஜூ, அன்பழகன், தங்கமணி ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர்கள் இதில் பங்கேற்க மாட்டார்கள்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x