மெட்ரோ சேவையை அனுமதியுங்கள் – மத்திய அரசுக்கு டில்லி முதல்வர் கோரிக்கை!

டில்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாகவும், அதனால் மெட்ரோ சேவையை மீண்டும் துவங்க அனுமதிக்க வேண்டும் எனவும் முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து புறநகர், எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்கள், மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. 5 மாதங்களாக பொதுப் போக்குவரத்தை தொடங்காமல் மத்திய அரசு மெளனமாக இருப்பதால் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக மருத்துவ சிகிச்சை பெற வெளியூர் செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், டில்லியில் மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், ரூ.1,300 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளது. படிப்படியாக இங்கு மெட்ரோ சேவையை துவக்க வேண்டும். டில்லி மட்டுமே மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாத ஒரே நகரம். நாங்கள் எங்கள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து பணியாற்றுகிறோம். மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.