300 கிலோ எடையுள்ள மனிதன்.. கிரேன் மூலம் மீட்பு..!
பிரான்சில் உள்ள பெர்பிக்னன் பகுதியைச் சேர்ந்தவர் அலைன் பி. இவர் கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்தின் காரணமாக வீட்டில் படுத்தபடுக்கையாக இருந்துள்ளார். இதனால் இவரின் உடல் எடை 250 முதல் 300 கிலோ வரை கூடியுள்ளது.
இதையடுத்து இவருக்கு உதவி செய்ய மாண்ட்பெல்லியர் மருத்துவமனை முன்வந்தது. ஆனால், இவரால் வீட்டை விட்டுக் கூட வெளியே வர முடியவில்லை. அந்த அளவிற்கு இவரது உடல் பருமனாக இருந்துள்ளது.
இதையடுத்து, 50க்கும் மேற்பட்ட மீட்புபணி வீரர்கள் அவரது வீட்டின் ஒருபகுதியை உடைத்து, கூண்டில் அவரை வைத்து கிரேன் மூலமாகத் தூக்கி இறக்கினர்.
இதையடுத்து இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் அவரை மீட்புக் குழுவினர் வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்த வீடியோக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.