கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியது பிரிட்டன் அரசு!!
கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியது பிரிட்டன் அரசு.
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.41 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.44 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஃபைசர் – பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஃபைசர்-பயோன்டெக் தயாரித்து உள்ள கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அந்நிலையில் அடுத்த வாரம் முதல் பிரிட்டன் முழுவதும் கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு போட ஏற்பாடு செய்துள்ளது. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ஒப்புதல் வழங்கிய முதல் நாடு பிரிட்டன் ஆகும்.