“சுமார் ஆறு ஆண்டுகளில் செவ்வாய் கோளில் மனிதர்கள்” – ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க்
2026ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கோளில் மனிதனை தரையிறக்கும் முயற்சி வெற்றி பெறும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அறிவியல் துறையில் ஆய்வு மேற்கொள்ளும் தனியார் நிறுவனமாகும். இந்த நிறுவனம் தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் செவ்வாய் கோளில் மனிதர்களைத் தரையிறக்குவது குறித்து அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“இப்போதிலிருந்து சுமார் ஆறு ஆண்டுகளில் செவ்வாய் கோளில் மனிதர்களை இறங்குவதைப் பற்றி மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொடர்ச்சியான ஆய்வுகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்த எலான் மஸ்க் இன்னும் 3 ஆண்டுகளில் இதற்கான முயற்சிகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.