4 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கிறேன் – பஞ்ச் டயலாக் பேசிய டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்துவிட்டாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற ரேஞ்சில் தோல்வியை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாமல் வெள்ளை மாளிகையை வலம் வருகிறார் டிரம்ப்.
இவர் மாளிகையை காலி செய்வாரா மாட்டாரா என பிடன் குழுவினர் வழி மீது விழி வைத்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் சமீபத்திய விருந்து நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியுள்ளார். வெள்ளை மாளிகை அதிகாரிகள், ரிபப்ளிக் கட்சி முக்கியஸ்தர்கள் அந்த விருந்தில் பங்கேற்றனர்.
வெற்றி பெற முயற்சிக்கிறேன். ஒருவேளை அது இல்லை என்று தெரிந்தால் உங்களை 4 ஆண்டுகள் கழித்து சந்திப்பேன் என பஞ்ச் எல்லாம் பேசியுள்ளார். ஆனாலும் அவர் மனம் பஞ்சராகி இருப்பதாகவே பலரும் தெரிவிக்கின்றனர். வயதாகிவிட்டதால் அடுத்த முறை நிச்சயமாக கட்சி அவருக்கு வாய்ப்பு வழங்காது என்கின்றனர். 74 வயதாகும் அவர் ரஜினியை விட நான்கு வயதே மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.