8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? அரசு முக்கிய அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நவம்பரில் தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்கலாம் என அரசு அறிவித்திருந்தது.
ஆனால், பெற்றோர்கள் மத்தியில் இருந்த எதிர்ப்பு காரணமாக இந்த முடிவு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் இறுதியாண்டு தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் மட்டும் செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பள்ளிக்கு வரும்படி செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளிகள் திறக்கப்படும் தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
அவர்களுக்கு இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடக்கும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
அதேபோல் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2021ஆம் ஆண்டு மார்ச் 31வரை பள்ளிகள் திறக்கவேண்டாம் என அறிவித்துள்ளார். இவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் எனவும், பிராஜெக்டுகள் கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.