சத்தமில்லாமல் உயரும் பெட்ரோல், டீசல் விலை..!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெட்ரோல், டீசல் விலை மாதம் இருமுறை நிர்ணயிக்கப்பட்டு வந்தது. சமிபத்தில் தான் இதன் விலையை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.
இதனை தினமும் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன.
சென்னையில் இன்று பெட்ரோல் 26 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.86.51க்கும், டீசல் லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து ரூ.79.21க்கும் விற்கப்பட்டுவருகிறது. இதில் சில மாவட்டங்களில் டீசல் விலை லிட்டருக்கு 80 ரூபாயையும் தாண்டி விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவே கடந்த 10 தினங்களுக்கு முன்பாக, அதாவது நவம்பர் 27 அன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.91 க்கும், டீசல் லிட்டர் ரூ.77.30க்கும் விற்கபப்ட்டு வந்தது.
15 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்கப்பட்டதைக் காட்டிலும் தற்போது தினமும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிப்பதால் இந்த விலை உயர்வு ஏற்படுகிறது என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதோடு தினமும் 10 காசுகள், 20 காசுகள் என உயர்வதால் இந்த விலை உயர்வு சத்தமில்லாமல் நடைபெறுகிறது எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.