சீதாப்பழத்தின் பத்துவித மருத்துவ பயன்கள்.

சீதாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. சீதாப்பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.

1. சீத்தாப்பழத்தை க செரிமானம் ஏற்படும்.

2. சீத்தாபழச் சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசி வர பிளவை பழுத்து உடையும்.

3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவர புண்கள் ஆறும்.

4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறு பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும்.

5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.

6. சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.

8. சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்து வர எலும்பு உறுதியாகும், பல்லும் உறுதியாகும்.

9. சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து, இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து, ஊறிய பின்னர் குளித்து வர தலை குளிர்ச்சி பெறும், முடியும் உதிராது, பொடுகு காணாமல் போகும்.

10. சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x