ஆப்பிள் நிறுவனம் தனது இணைய விற்பனையகத்தை இந்தியாவில் தொடங்கியுள்ளது..

ஆப்பிள் நிறுவனம் தனது இணைய விற்பனையகத்தை இந்தியாவில் புதன்கிழமை தொடங்கியது.

இந்தியாவில் தீபாவளி போன்ற பண்டிகைகள் வரவிருக்கும் நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது விற்பனையகத்தை தொடங்கிவுள்ளது. இதன்மூலம் விற்பனை மற்றும் சேவைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்கும்.

ஆப்பிள் ஆர்பாடில் ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு முதலிய எழுத்துகள் பயன்படுமாறு தயார் செய்யப்பட்டுள்ளது.

பொருள்களை விநியோகம் செய்ய புளு டார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள கரோனா தொற்றின் காரணமாக பொருள்களை பாதுகாப்பாக விநியோகம் செய்ய இணையத்தில் வாங்கியதிலிருந்து 24 முதல் 72 மணிநேரமாகும் என தெரிவித்துள்ளனர்.

விநியோகத்தின் போது தொடர்பில்லா பணப்பரிவர்த்தனையும் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் தயாரிப்புகளை வாங்குவோர் பரிசு தர விரும்பினால், அந்த பொருளில் பரிசு காகிதம் ஒட்டித் தரவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

உலகளவில் 38வது இணைய விற்பனையகமாக இந்திய விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளில் உள்ள சந்தேகங்களை தெரிந்து கொள்ள ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி இணையத்தளம் மற்றும் தொலைபேசி எண் மூலம் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் வழிகாட்டுதல்களை பெற்றுக் கொள்ளலாம்.

ஆப்பிள் தயாரிப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதைப் பற்றி தெரிந்து கொள்ள 30 நிமிடங்கள் நிறுவன ஊழியர்களின் இணைய பயிற்சியில் ஈடுபட்டுக் கொள்ளலாம். ஆப்பிள் இணைய விற்பனையகம் எளிதில் உபயோகிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கடன் உதவி தேவைப்படுபவர்களுக்கான திட்டமும் உள்ளது.

மேக் அல்லது ஐ-பாட் வாங்கும் மாணவர்களுக்கு சிறப்புத் தள்ளுபடிகள், பாகங்களுக்கான தள்ளுபடிகள் மற்றும் ஆப்பிள் கேர்+ மூலம் 2 ஆண்டுகள் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் தற்செயலான சேதம் சரி செய்து தரப்படும்.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் கடையை மும்பையில் 2021ஆம் ஆண்டு திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. மேலும் ஆப்பிள் நிறுவனம் செய்யவிருக்கும் புதிய முதலீடுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் 9 லட்சம் வேலை வாய்ப்புகள் வேலைகள் உருவாகவுள்ளது என தெரிவித்துள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x