“அருணாச்சலில் 90,000 சதுர கி.மீ., லடாக்கில் 38,000 சதுர கி.மீ பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது!” ராஜ்நாத் சிங்!!

அருணாச்சலில் 90 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவை சொந்தம் கொண்டாட சீனா முயற்சி மேற்கொண்டுள்ளது. லடாக்கில் 38 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லடாக் எல்லையில் இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், மாநிலங்களவையில் இன்று பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். அவர், “இந்தியா – சீனா இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் சீனா செயல்பட்டால் எல்லையில் அமைதியை தொடர்ந்து நிலைநாட்ட முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி தரப்படும். நமது மண்ணை யாரையும் ஆக்கிரமிக்க விடமாட்டோம்.

அருணாச்சலில் 90 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவை சொந்தம் கொண்டாட சீனா முயற்சி மேற்கொண்டுள்ளது. லடாக்கில் 38 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாகவே, சர்வதேச எல்லைப் பகுதியில் சீனா பல கட்டடமைப்புகளை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. நமது அரசும் தற்போது எல்லைப் பகுதியில் கட்டமைப்புகளை மேம்படுத்த முன்பு ஒதுக்கப்பட்ட நிதியை விட இரண்டு மடங்கு கூடுதல் தொகையை ஒதுக்கி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

எல்லைப் பகுதியில் தற்போது பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. ஆனால், தொடர்ந்து அமைதியை நிலைநாட்டவே நாம் முயன்று வருகிறோம், அதேவேளை, எந்த சவாலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம்” என்று ராஜ்நாத் கூறியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x