கோவிட்-19 தடுப்பூசி போட்டவர்களுக்கு ஹெச்.ஐ.வி.. ஆஸ்திரேலியாவில் பரபரப்பு..!
![](https://thambattam.com/storage/2020/12/202008020113122390_Tamil_News_Russia-1st-nation-to-finish-human-trials-for-Covid19_MEDVPF.jpg)
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் சிஎஸ்.எல் நிறுவனம் இணைந்து கோவிட் 19க்கான தடுப்பூசியை தயாரித்து வந்தது. இந்த தடுப்பூசியின் சோதனை, முதற்கட்டமாக 216 பேருக்கு போடப்பட்டது.
தடுப்பூசி போடப்பட்ட பின்னர் அவர்களுக்கு நடைபெற்ற சோதனையின் போது நான்கில் ஒருவருக்கு ஹெச்ஐவி பாசிடிவ் இருப்பது போன்று தவறான முடிவுகள் வந்துள்ளது.
இதையடுத்து உடனடியாக தடுப்பூசிகள் போடுவதை அந்நாட்டு அரசு நிறுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சி.எஸ்.எல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசி உண்மையில் பாதுகாப்பானது தான். இரண்டாம் கட்டமாக எடுக்கப்பட்ட சோதனையில் இவர்களுக்கு ஹெச்.ஐ.வி இல்லை என வந்துள்ளது.
இருப்பினும் இதுதொடர்பாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் முற்றிலும் பாதுகாப்பான தடுப்பூசியுடன் திட்டமிட்டபடி இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகள் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
இதுவரை ஆஸ்திரேலியாவில், 28.,011 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 908 பேர் இறந்துள்ளனர்.