ஒரே கீரை..! பல நோய்க்கு தீர்வு..!

சிறுகீரையானது பரவலாக தோட்டங்களிலோ, வீடுகளிலும் பயிர் செய்யப்படும் ஒரு வகை கீரை வகையாகும். மூளைகீரை, தண்டுகீரை போன்ற கீரை வகைகளை சேர்ந்த மிகசிறிய கீரை வகையாகும். சுமார் இருபது செ.மீ உயரம் வரை வளரக்கூடியது. நிறைய கிளைகள் உடையதாக இருக்கும். இக்கீரை மெல்லிய தோற்றமுடையது. இக்கீரை மருந்துகளின் வீரியத்தை குறைக்க கூடியது.

இந்த கீரையில் சுண்ணாம்புசத்து, இரும்புசத்து போன்றவை மிக அதிக அளவில் உள்ளன. நீர்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்பு, மாவுசத்து, ஆகியவையும் இதில் உள்ளன. இந்த கீரையில் வைட்டமின் ஏ, பி, சி ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன.

உடற்பருமன் கொண்டவர்கள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் சாப்பிட ஏற்ற கீரை சிறுகீரை.

சிறு கீரை மருத்துவ பயன்கள்:

*சிறுகீரையை தினமும் சமைத்துச் சாப்பிட்டால் இரும்புச் சத்து உடலில் அதிகரிக்கும் மேலும் காச நோய் குணமாகும்.

*நீர்க்கடுப்பு, வீக்கம்பித்தநோய் சரியாகும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இக்கீரையை எடுத்து கொண்டால் உடலில் உள்ள இன்சுலின் சுரப்பு இயல்பாக இருக்கும்

*இக்கீரையில் கால்சியம் சத்து மிகுதியாக இருப்பதால் எலும்பு பலப்படும்.

*இந்தக்கீரையில் நமது நினைவாற்றலை அதிகரிக்க கூடிய சத்துகள் அடங்கியுள்ளன.

*மேலும் இந்த கீரையை தொடர்ந்து எடுத்து வர எரிச்சல் தணியும், மூலநோயைக் கட்டுப்படுத்தும், வாயு மற்றும் வாதநோயை அகற்றும். மாலைக்கண் போன்ற நோய்களை குணமாக்கும்

*சிறுகீரை உடலுக்கு அழகையும், முகத்துக்குப் பொலிவையும் தரக்கூடியது.

*சிறுகீரையுடன் மிளகு, வெங்காயம், பூண்டு, மஞ்சள் சேர்த்து சூப் செய்து சாப்பிட கண் புகைச்சல் குறையும்.

*சிறுகீரையுடன், முந்திரிப் பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மீது தடவ முகப்பரு குறையும்.

*சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் குணமாக சிறுகீரை மற்றும் மஞ்சளை சேர்த்து கஷாயம் வைத்து குடிக்க வேண்டும்

*சிறு கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தேய்த்துக்கொண்டால் சொரி , சிரங்கு , படை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x