பாறை மீது போஸ் கொடுத்த பெண்.. குடும்பத்தினர் கண்முன்னே 262 அடி பள்ளத்தில் விழுந்து பலி!!
![](https://thambattam.com/storage/2020/12/IMG_20201215_005742-780x358.jpg)
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், பாறை மீது நின்று புகைப்படம் எடுக்கும்போது குடும்பத்தினர் கண்முன்னே 262 அடி பள்ளத்தில் விழுந்து இறந்துள்ளார் ஒரு பெண்.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள கிராம்பியன்ஸ் தேசிய பூங்காவில் புகைப்படம் எடுக்கும் போது 38 வயதான ரோஸி லூம்பா என்ற பெண் குன்றிலிருந்து 262 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.
காவல்துறையினரின் தகவல்களின்படி “லூம்பா அந்த குன்றில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடைகள் மற்றும் எச்சரிக்கை அறிகுறிகளை கடந்து சென்று, புகைப்படத்திற்காக ஒரு பாறை மீது நின்று போஸ் கொடுத்தார். அப்போது அவர் தனது கணவர் மற்றும் குழந்தையின் கண்முன்னே பாறையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்” என தெரிவித்தனர்
குன்றிலிருந்து விழுந்து உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்க மாநில அவசர சேவை குழுவினரும், விக்டோரியா போலீசாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.