பள்ளிக்கூடத்தில் இருந்து 321 மாணவர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்!! கண்ணீருடன் பெற்றோர்கள்..
நைஜீரியாவின் வடமேற்கு கட்சினா பகுதியில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளனர்.
அரசு உதவி பெறும் ஆண்களுக்கான இந்த பள்ளிக்கூடத்தில் இருந்து 321 மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மாகாணம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீட்பு நடவடிக்கையில் தற்போது ராணுவமும் உளவுத்துறையும் இறங்கி உள்ளது.
மாணவர்கள் கடத்தப்பட்டது தெரிய வந்ததை அடுத்து, பெற்றோர்கள் கண்ணீருடன் அந்த பள்ளிக்கூடம் முன் திரண்டுள்ளனர். கடத்தப்பட்ட மாணவர்கள் தொடர்பாக இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை . இதுவரை எந்த அமைப்பும் கோரிக்கை எதையும் முன்வைத்து கடத்தலுக்கு பொறுப்பேற்கவில்லை.