துருக்கி மீது பொருளாதாரத் தடை விதித்த டிரம்ப்!! இந்தியாவிற்கும் எச்சரிக்கை..
![](https://thambattam.com/storage/2020/12/202009152009240478_Tamil_News_US-President-Trump-warns-to-Iran_MEDVPF.jpg)
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் பொறுப்பேற்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, ரஷிய தயாரித்த எஸ் 400 ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை வாங்குவதற்காக துருக்கி மீது டிரம்ப் நிர்வாகம் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
மேலும் ரஷியா உற்பத்தி செய்யும் ஆயுதங்களை வாங்குவது குறித்து இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. துருக்கியின் இராணுவ ஆயுத கொள்முதல் நிறுவனத்தின் நான்கு மூத்த துருக்கிய அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு உதவி செயலாளர் கிறிஸ்டோபர் போர்டு தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகளை அறிவித்து உள்ளார்.
இதில் துருக்கி ஒரு நேட்டோ நட்பு நாடு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா முழுமையாக அமல்படுத்தும் என்பதையும், ரஷிய ஆயுதங்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்பதையும் உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளும் கவனத்தில் கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கிறிஸ்டோபர் போர்டு கூறி உள்ளார்.
ரஷியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு எதிராக அமெரிக்கா பலமுறை இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது, அதே நேரத்தில் பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாகவும் அச்சுறுத்தியது.
2019 ல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்தியா பயணத்தின் போது, டிரம்ப்பும் பிரதமர் நரேந்திர மோடியும் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுத ஒப்பந்தத்தை அறிவித்தனர் எனபது குறிப்பிடதக்கது.