திருக்குவளையில் பிரச்சாரம் செய்ய சென்ற உதயநிதி ஸ்டாலின் கைது!! 

திருக்குவளையில் தடையை மீறி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து தேர்தல் பிரச்சாரப் பயணத்தை துவங்குவதற்காக, இன்று மாலை 3 மணிக்கு, திருவாரூர் வந்தடைந்தார். அங்கு சன்னதி தெருவில் இருக்கும் கலைஞரின் சகோதரி வீட்டில், மதிய உணவை முடித்துக்கொண்டு, கலைஞரின் தாயார் சமாதியிருக்கும் காட்டூருக்குச் சென்று வணங்கினார். அப்போதே காவல்துறையினர் ஐந்து கார்களுக்கு மேல் சென்றால் கைது செய்வோம் எனக் கூறியிருந்தனர்.

இந்நிலையில், திருக்குவளையில் தடையை மீறி பிரச்சாரம் மேற்கொள்ள வந்ததாக, உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்து, திருமண மண்டபம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றனர். உதயநிதியின் கைதை எதிர்த்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் அங்கிருந்த தி.மு.க தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.

கைது செய்யப்பட்டதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “அடிமை அதிமுக-பாசிச பாஜகவுக்கு எதிராக மொத்த தமிழகமும் உள்ளது. அந்த உணர்வை ஒன்றுபட்டு ஒருங்கிணைக்க ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பிரச்சார பயணத்தை திருக்குவளையில் இன்று தொடங்கினேன்.அதை முடக்க நினைத்து கைது செய்கின்றனர். எங்கள் உணர்வை அடக்க அடக்க வெகுண்டெழுவோம்-தமிழகம் மீட்போம்!” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x