மதுபான கடைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை..!

சென்னையில் உள்ள எலைட் உயர்தர மதுபானக்கடைகளில் நேற்று இரவு முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் வேளச்சேரி, எழும்பூர் உள்ளிட்ட 5 இடங்களில் நேற்றிரவு 9மணிக்கு துவங்கிய சோதனை விடிய விடிய நடைபெற்று வருகிறது. கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதாக வந்த புகாரின் பேரில் கடந்த 9 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதில் இதுவரை வேளச்சேரி ஃபினிக்ஸ் மாலில் செயல்பட்டு வரும் எலைட் மதுபானக் கடையில் இருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட 18ஆயிரம் ரூபாயை கைப்பற்றியுள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x