விஞ்ஞானிகள் குழுவை அனுமதிக்க வேண்டும்; சீனாவை வலியுறுத்தும் ஆஸ்திரேலியா..

உலக சுகாதார அமைப்பு அனுப்பும் விஞ்ஞானிகள் குழுவை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் பரவியுள்ளது என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் 10 பேர் அடங்கிய விஞ்ஞானிகள் குழு இம்மாதம் சீனாவுக்குச் செல்ல இருப்பதாகத் தகவல் வெளியானது.
ஆனால், விஞ்ஞானிகள் குழு செல்வதற்கு அனுமதிக்கவில்லை என்றும், சீனாவின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு நேற்று தெரிவித்தது. இந்நிலையில் விஞ்ஞானிகள் குழுவை அனுமதிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் மாரிசே ப்யானே கூறும்போது, “ உலக சுகாதார அமைப்பு அனுப்பும் விஞ்ஞானிகள் குழுவை தாமதிக்காமல் அனுமதிக்க வேண்டும். விரைவில் இது தொடர்பான நடவடிக்கையில் இறங்கும் என்று நம்புவோம்” என்றார்.
சில நாட்களுக்கு முன்னர், வூஹானின் ஆய்வகத்திலிருந்து பரவவில்லை. உலகின் பல இடங்களில் வெடிப்பு நிகழ்ந்துள்ளது என்று விளக்கம் அளித்தது.
உலகையே அச்சுறுத்திவரும் வைரஸால் இதுவரை உலக அளவில் 8.5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.