கணவர் தற்கொலை – வீட்டிலிருந்த நகைகளுடன் மனைவி மாயம்

சென்னை பள்ளிக்கரணையில் மளிகைக்கடைக்காரர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது மனைவி மீது குற்றம்சாட்டி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட பழனிவேல்ராஜா என்ற அந்த நபருக்கு 50 லட்ச ரூபாய் வரை கடன் இருந்துள்ளது. கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு கடனை அடைத்து வந்துள்ளார். ஆனால் வருமானம் முழுவதையும் தன்னிடமே கொடுக்குமாறு மனைவி சாந்தாதேவி அவருடன் சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
பழனிவேல் ராஜா தற்கொலை செய்துகொண்ட சிறிதுநேரத்தில் அதுகுறித்த கவலையே இல்லாமல், வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு சாந்தாதேவி மாயமாகிவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.