இந்த ஆப்களை பயன்படுத்தாதீர்? – காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை

ஆன்லைன் ஆப்-களில் கடன் பெற வேண்டாம் என சென்னை பெருநகர சென்னை காவல் துறையின் அங்கமான மத்திய குற்றப்பிரிவு அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: –

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமார் 60 ஆன்லைன் கடன் அப்ளிகேஷன்களுமே ரிசர்வங்கியால் NBFC (Non Banking Financial Company) ஆக பதிவு செய்யப்படவில்லை. எனவே இந்த லோன் ஆப்களில் செயல்பாடுகள் அங்கீகரிக்கப்படாதவைகள். 

இந்த அப்ளிகேஷன்கள் உபயோகிப்பவர்களின் கைபேசியின் எல்லாத்தகவல்களையும் சேகரித்து உபயோகிப்பவர்களின் தனியுரிமை மீறும் வைகையில் பயன்படுத்துகின்றன.

கடன் அடிப்படையிலான இத்தகைய அப்ளிகேஷன்களை பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். 

பொதுமக்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்கள், ஆதார் அல்லது வங்கி விவரங்களை மேற்படி பதிவு பெறாத முறைப்படுத்தப்படாத அப்ளிகேஷன்களில் கொடுக்க வேண்டாம். 

உங்களின் அனைத்து தொலைப்பேசி தொடர்புகள், புகைப்படங்கள், கேமரா இருப்பிடங்கள் மற்றும் தொலைப்பேசி நினைவகம் ஆகியவை இந்த பணக் கடன் வழங்குநர்களால் சமரசம் செய்யபபடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும்.

உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ அச்சுறுத்தல் மற்றும் துன்புறுதல் அழைப்புகள் வந்தால் காவல்துறையில் புகார் கொடுங்கள்.

இந்த அப்ளிகேஷன்களில் உள்ள தொடர்பு விவரங்கள் குறை தீர்க்கும் அதிகாரியின் பெயர்கள் மோசடியானவை. ஒரு NBFC (Non Banking Financial Company-யின் உண்மையான தன்மை குறித்து ரிசர்வ் வங்கியின் வலைத்தளத்தில் சரிபார்க்கவும். என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கூறி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x