விவசாயிகள் வசதி படைத்தவர்கள் இல்லை – ராகுல் பேட்டி

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் கடந்த 4 வாரங்களுக்கு மேலாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை 5 கட்டப் பேச்சு விவசாயிகளுக்கும், மத்திய அ ரசுக்கும் இடையே நடந்தும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் நாடு முழுவதிலும் இருந்து, வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 2 கோடி பேரிடம் அந்த கட்சியினர் கையெழுத்து பெற்றிருந்தனர். இதன் பிரதிகளை குடியரசுத் தலைவரிடம் தற்போது ராகுல் காந்தி சமர்ப்பித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, அரசுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் வசதி படைத்தவர்கள் அல்ல. நீங்கள் யாரை தீவிரவாதிகள் சமூக விரோதிகள் என அழைக்கிறீர்களோ அவர்கள் தான் இந்த நாட்டின் வளத்தை அளிப்பவர்கள். அவர்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பாக இருக்க கூடியவர்கள். பிரதமர் மோடி யாருக்காக வேலை செய்கிறார் எனக் கேள்வி எழுப்பினார்.