பிரிட்டனிலிருந்து விமானப் போக்குவரத்துக்கு சீனா தடை..
அதிதீவிர கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு சீனா தற்காலிகத் தடை விதித்துள்ளது.
பிரிட்டனில் தன்னைத்தானே தகவமைத்துக் கொண்ட புதிய அதி தீவிர கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, பிரிட்டனிலிருந்து விமானப் போக்குவரத்துக்கு இந்தியா, அயர்லாந்து, இத்தாலி, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, சௌதி அரேபியா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் தடை விதித்திருக்கும் நிலையில், சீனாவும் தடை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.