வாழ்வியல் துறையில் இப்படியும் சாதனை புரியலாம்…39 மனைவி,94 குழந்தைகள்!!!
ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் ஜியோனா சனா என்பவர் 39 மனைவி, 94 குழந்தைகள் என மொத்தம் 180 உறுப்பினர்களுடன் உலகின் மிகப் பெரிய குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த 21ஆம் நூற்றாண்டில் கூட்டுக்குடும்பம் என்பதே அரிதாகிவிட்டது. இந்தக் காலத்தில் ஒருவர் 180 உறுப்பினர்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா!
இந்தியாவின் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜியோனா சனா. 75 வயதாகும் இவர்தான் உலகிலேயே மிகப் பெரிய குடும்பத்தின் தலைவர்.
180 உறுப்பினர்களைக் கொண்ட மிகப் பெரிய குடும்பம்
180 உறுப்பினர்களைக் கொண்ட மிகப் பெரிய குடும்பம்
இவரது குடும்பம் அழகிய மிசோரம் மாநிலத்தின் இந்தியா-வங்கதேச எல்லையிலுள்ள செர்ச்சிப் மாவட்டத்தில் உள்ள பக்தாங் என்ற கிராமத்தில் வசிக்கிறது.