மூன்றாவது முறையாக பொதுமுடக்கம் அமல்படுத்தும் நாடு..
இஸ்ரேல் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முதல் மூன்றாவது முறையாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இஸ்ரேலில் இதுவரை கரோனாவால் மொத்தம் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், கரோனா பரவலை தடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்போவதாக பிரதமர் பெஞ்சமின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில்,“கரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முதல் குறைந்தது 2 வார காலத்திற்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும். நோய் பரவுவதில் குறிப்பிடத்தக்க சரிவு இல்லாதிருந்தால், கூடுதலாக 14 நாள்கள் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும்.
இஸ்ரேலில் ஏற்கனவே இந்த ஆண்டில் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதத்தில் இரண்டு முறை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது தொற்றின் பரவல் வெகுவாக குறைந்தது. பொதுமுடக்கத்தை தளர்த்திய பிறகு தற்போது மீண்டும் பரவல் அதிகரித்து வருகின்றது. ஆகையால் மூன்றாவது முறையாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது.” எனத் தெரிவித்தார்.