ராஜஸ்தான் அரசியல் குழப்பம் தொடர்பில் பிரியங்கா காந்தி, சோனியா சந்திப்பு;

ராஜஸ்தான் மாநில, துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் அம்மாநில முதல்வர் அசோக் கெஹ்லட்டிற்கும் இருந்து வந்த உரசல் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 16 பேர், ஆட்சியை கலைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், பின்னணியில் பா.ஜ.க. கட்சியும் செயல்படுவதாக கூறப்படுகிறது.

கட்சிக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டு சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், டெல்லி இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, பிரியங்கா காந்தி சந்தித்து பேசி வருகிறார். ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வரும் சூழலில் சோனியா காந்தியுடன் பிரியங்கா காந்தி சந்தித்து பேசி வருகிறார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x