சிக்கித் தவிக்கும் ஹாங்காங்.. வழக்கை திட்டமிட்டு ஒத்திவைக்கும் சீனா!!
ஹாங்காங்கில் உள்ள ஜனநாயக ஆதரவாளர்கள் தற்போது சீன கம்யூனிச அரசின் பிடியில் சிக்கித்தவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு சீனா ஓர் ஐந்து அம்சத் திட்டத்தை வகுத்தது. இதன்படி சீனாவால் பகுதியாக கட்டுப்படுத்தப்படும் ஹாங்காங்கை தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தி முழுவதுமாக ஆக்கிரமிக்க சீனா முயற்சி மேற்கொண்டது.
இதனை அடுத்து ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவாளர்களின் போராட்டம் வெடித்தது. பிடிவாரன்ட் இல்லாமல் பொது இடங்களில் ஜனநாயக ஆதரவாளர்கள் பலர் சீன போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
வன்முறைப் போராட்டத்தில் ஈடுபடும் 12 ஜனநாயகவாதிகள் சீனா கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி சிறையில் அடைத்தது.
சீனாவின் இந்த மனித உரிமை அத்துமீறலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன.
கைதாகிய 10 குற்றவாளிகள் சட்டவிரோதமாக ஹாங்காங் கடல் எல்லையில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது சீன கப்பல் படை அவர்களை கைது செய்தது. இவர்களை விடுவிக்க தற்போது அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்று சீனா வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத்தது.
தப்பிச்செல்ல முயற்சித்த குற்றவாளிகளுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. அடக்குமுறை பிடிக்காமல் தப்பிச் செல்ல முற்படும் ஜனநாயகவாதிகளுக்கு குற்றவாளிகள் என்று சீனா பெயர் சூட்டி உள்ளது என ஹாங்காங் உள்ள அமெரிக்க தூதரகம் கண்டனம் தெரிவித்தது.