நாளை முதல் ஆன் லைன் வகுப்பா! அப்ப இதை படித்து விட்டு செல்லுங்கள்?

கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டு அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன இதில் கல்வித்துறையும் விதி விலக்கல்ல, அனைத்து பள்ளி,கல்லூரிகள் வருகிற(ஆகஸ்ட்) 31-ந்தேதி வரை மூடப்படும் என்று மத்திய-மாநில அரசுகள் ஏற்கனவே அறிவித்துவிட்டன.

இந்தநிலையில் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் பல தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க அரபித்து விட்டன.
இதன் தொடர்ச்சியாக சென்னை பல்கலைக்கழகம் அதன் உறுப்பு கல்லூரிகளில் இளங்கலை 2 மற்றும் 3-ம் ஆண்டு மற்றும் முதுகலை 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்க இருப்பதாக அறிவித்தது.
அதேபோல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் நாளை முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கும் என்று கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இதேபோல், ஒவ்வொரு மண்டல இணை இயக்குனர்கள் அந்தந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் குறித்து சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளனர்.