புத்தாண்டு கொண்டாட்டம் : எதற்கெல்லாம் தடை, அனுமதி..!

இன்று இரவு முதலே புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பமாகி விடும். ஆனால், இன்று (டிசம்பர் 31-ஆம் தேதி) நள்ளிரவு மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி, தமிழகத்தில் சாலைகள் மற்றும் அனைத்துக் கடற்கரையிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தளர்வுகளின் அடிப்படையில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், தங்கும் விடுதிகள் செயல்பட்டாலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

சென்னையை பொறுத்தவரை லட்சக்கணக்கானோர் மெரினா கடற்கரையில் ஒன்று கூடுவார்கள். அதேபோல, ஸ்டார் ஹோட்டல்களிலும், ரிசார்ட்களிலும் ஒன்றுகூடி புத்தாண்டை வரவேற்பார்கள். ஆனால், இந்த வருடம் கொரோனா அச்சம் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. பிற்பகலில் மெரினா கடற்கரைக்கு சீல் வைக்கப்பட உள்ளது. இதே போன்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரை பகுதிகள் அனைத்தும் மூடப்படுகிறது.

இன்று நள்ளிரவில் சென்னையில் உள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்தை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளது. இரவு 10 மணிக்கு பிறகு தேவையில்லாத வகையில் மோட்டார்சைக்கிள் மற்றும் கார்களில் செல்பவர்களை தடுத்து நிறுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

அதன்காரணமாக, ஸ்டார் ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களை, நாளை இரவு 10 மணிக்கு மேல் திறக்கக்கூடாது என சென்னை மாநகர காவல் கமிஷனர் மகேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.அதேபோல, உணவகங்களும் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட அனுமதி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்..

புத்தாண்டு இரவு வழக்கம்போல போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பர் என்றாலும் இந்த முறை 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், 300 இடங்களில் வாகன சோதனை நடைபெற உள்ளதாகவும் கமிஷனர் தெரிவித்துள்ளார். 

தடையை மீறி யாராவது ஸ்டார் ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், ரிசார்ட்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல, வாகனங்களில் ரேஸ் நடத்தினால், அவர்கள் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டும் என்று கமிஷனர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x