விமான சேவைகளுக்கான தடை: ஜனவரி 7ந்தேதி வரை தடை நீட்டிப்பு

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், பிரிட்டன் விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒருவாரம் நீட்டித்து மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி விமான சேவைகளுக்கான தடை ஜனவரி 7ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் சர்வதேச விமானங்கள், மார்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான, தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. எனினும், ‘வந்தே பாரத்’ திட்டம் மற்றும் ஒப்பந்தம் அடிப்படையில், பல்வேறு நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, பிரிட்டனில், புதிய மாற்றங்களுடன், கொரோனா வைரஸ் வேகமாக பரவத் துவங்கியது. இதையடுத்து, இந்தியா – பிரிட்டன் இடையிலான விமானங்கள், கடந்த, 23ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த விமான சேவைகளுக்கான தடை, இன்று (டிச.,31) வரை உள்ளது.
இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தனது டுவிட்டர் பக்கத்தில், ‘பிரிட்டனில் இருந்து விமான சேவை ஜன.,7ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தவைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.